தந்தையின் அன்பிற்காக தாயை க்யூட்டாக என்ன செய்யுது பாருங்க இந்த குழந்தை… இந்த possessivenessக்கு ஈடு இணையே இல்ல பாருங்க..!

இந்த உலகத்தில் மகிழ்ச்சியை அடைந்தவர் அடையும் சிறப்பு…..அவர் அன்புள்ளவராய் இருந்து வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர். அன்பு என்ற வார்த்தைக்கு விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அதுமட்டும் அல்ல அன்பை விலைக்கு விற்கவும் முடியாது. அதனால் தான் சிலர் அன்பை கொடுக்கிறார்கள், சிலர் அன்பை கொடுப்பதில்லைப் போலும்.தாய்-மகள்; தாய்-மகன்; தந்தை-மகள்; தந்தை மகன் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு இடையில் இருக்கும் அன்பு ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது.

தந்தை-மகள் இடையே இருக்கும் உறவு தனியொரு வகை தான். இருவரும் அடித்தாலும் சண்டைப்போட்டாலும் மகளுக்கு எப்போதும் இருக்கும் ஒரு ஆண் நண்பன் தந்தை தான். தந்தைக்கு மகள் என்றும் சிறுபிள்ளை தான். தந்தையின் குறும்புடைய நகல் தான் மகள் என்றும் சொல்லலாம்.

அந்த வகையில் ஒருவர் தன் மகள் மற்றும் மனைவியுடன் விஷேச வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு தன் மகளை கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்… அப்போது அந்த குழந்தையின் தாய், குழந்தையின் தந்தையின் தோளில் விளையாட்டாக சாய்கிறார். அப்போது அந்த குழந்தை தன் தாயின் தலையை தன் கையால் தட்டி விடுகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் குழந்தைக்கு தந்தையிடம் ரொம்பவும் possessive தான், என்கின்றனர்.