ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்தை உறுதி செய்த கோர்ட்…
தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் விவகாரத்து வாங்கி கொண்டு வருவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் தான் உள்ளது. அந்த வகையில் சில வருடங்களாகவே விவகாரத்து கேட்டு கோர்ட்டில் முறையீட்டுருப்பவர்கள் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர். ஐஸ்வர்யா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளாவார்.
இவர்கள் இருவருமே 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்று இரு மகன்களும் உள்ளனர். 20 வருடங்களாக திருமண வாழக்கையில் இருந்த இவர்கள் தற்போது அதிகாரபூர்வமாக பிரிந்துளார்கள். இவர்கள் சில வருடங்களாகவே கருத்து வேறுபாட்டின் காரணமாக விவகாரத்து கேட்டு தான் கொண்டிருந்தார்கள். ஆனால் இரு வீட்டாரும் சேர்த்து வைக்க பல முயற்சிகள் எடுத்த போதிலும் தற்போது அது வீணாகி விட்டது.
இவர்கள் தொடர்ந்து இரு வழக்கிற்கு கோர்ட்டிற்கு வராமல் இருந்ததால் கண்டிப்பாக சேர்ந்து விடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் இவர்களின் விவகாரத்தை குடும்ப நல நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இவர்களின் மகன்கள் அம்மாவுடன் இருந்தாலும் மிகவும் புரிதல் உள்ள இவர்கள் தனுஷின் எந்த விழாவிலும் கலந்து கொள்ளவார்கள் என சினி பிரபலங்கள் கூறி வருகின்றனர்.