கியூட் மகளின் போட்டோஸை முதன் முதலில் சோசியல் மீடியாவில் வெளியிட்ட குக் வித் கோமாளி ரித்திகா…

2020-21ல் குக் வித் கோமாளியில் ஒரு போட்டியாளராக வந்து 6 வது இடத்தை பிடித்தவர் தான் ரித்திகா தமிழ் செல்வி. அதில் பாலாவுடன் இணைந்து காமடி செய்வதால் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதை தொடர்ந்து இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு இளைய மருமகளாக வந்தார்.

ஒருகாலத்தில் இந்த தொடர் டிஆர்பி-யில் டாப்பில் இருந்தது. ஆனால் தற்போது இத்தொடர் டிஆர்பியில் முதல் 5 இடத்தை கூட பிடிப்பதில்லை. இந்த தொடரை பற்றி சோசியல் மீடியாவில் அடிக்கடி எதிர் விமர்சனங்கள் பல எழும். இத்தொடர் விரைவில் முடிவுக்கு வர போவதாகவும் அடிக்கடி கூறுகிறார்கள்.

இத்தொடர் பீக்கில் இருக்கும் சமயத்திலே ரித்திகா அவர்கள் திருமணம் செய்து கொண்டு தொடரை விட்டு விலகினார். அண்மையில் ரித்திகாவிற்கு மகள் பிறந்திருப்பதாக தகவலை வெளியிட்டிருந்தார். தற்போது இவர் தன் கணவர் மற்றும் மக்களுடன் இணைந்து போட்டோ சூட் நடத்தி இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அழகு குட்டி என கமெண்ட் செய்து வருகின்றனர்.
