கைபடாமல் சுலபமாக பித்தளை பாத்திரங்களை பளபளன்னு மாற்றுவது எப்படி.. இத பாருங்க புரியும்..!

clean-pithali-paathiram-vide-news

வீட்டில் நாம் அதிகமாக பயன்படுத்தும் பித்தளை பாத்திரங்களை இந்த முறையை பயன்படுத்தி சுலபமாக சுத்தம் செய்யலாம். நம் வீடுகளில் பொதுவாக பயன்படுத்தும் பித்தளை பொருள் அகல் விளக்கு, இதனை சுத்தம் செய்ய பலர் பலவிதமான முறையை பயன்படுத்தி இருப்பீர்கள். இங்கு நாங்கள் மிக சுலபமான முறையில் சுத்தம் செய்யும் வழிமுறை தருகின்றோம்.

ஒரு பாத்திரத்தில் ஐந்து அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் சிறிதளவு புளி இட்டு அடுப்பில் நன்கு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதிக்கும் நிலை வரும்போது அதனுள் உங்கள் பித்தளை பொருட்களை போட்டு 2 முதல் 5 நிமிடங்கள் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

கொதிக்கும் போதே வினிகர் ஒரு நான்கு மூடி விட்டு மீண்டும் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் நன்கு கொதிக்க வையுங்கள். கொதிக்க வைக்கும் அதே வேளையில் 10 நிமிடங்கள் இடைவேளையில் உங்கள் பித்தளை பொருட்களை கிளறி விடுங்கள்.

நன்கு கொதிக்க கொதிக்க உங்கள் பித்தளை பொருட்களில் உள்ள எண்ணெய் மக்குகள் அழுக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி தண்ணீரில் கலந்துவிடும். இருபது நிமிடங்கள் கழித்து அடுப்பினை ஆப் செய்து உங்கள் பித்தளை பொருட்களை வெளியே எடுத்து பாருங்கள், உங்கள் பித்தளை பொருட்கள் புத்தம் புதிதுபோல மின்னும்.

வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது,பார்த்து பயனடையுங்கள்.

You may have missed