பார்க்கிங் பட இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோ இவரா..!! முன்னணி ஹீரோவை வைத்து படம் இயக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணன்…

பார்க்கிங் என்கிற படம் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் போன வருடம் வெளிவந்து ஹிட் கொடுத்த படம் ஆகும். இப்படம் முழுவதுமே கார் பார்க்கிங்காக இரு வீட்டார்கள் சண்டை போட்டு கொண்டிருப்பது போல காட்சிகள் இடம் பெறும் ஒரு நல்ல கதையாக கொண்டு போய்ருபார்கள்.

மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்ற இப்படம் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கியது ஆகும்.இப்படம் தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது.வெளிநாட்டு மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பார்க்கின் பட இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்கள் தனது அடுத்த படத்தை சீயான் விக்ரம் அவர்களை வைத்து இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் நிலையில் விரைவில் அதிகாரபூர்வமாக தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
