சடங்கு சம்பிரதாயங்களில் மும்மரமான கல்யாண வீடு… தொடர்ந்து பிரபலங்களின் வருகை கொண்டாட்டத்தில் நாகசைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா…

திரையுலகில் மிகவும் முக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் நாகஅர்ஜுனா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து கலக்கியுள்ளார். இவரின் முதல் மகன் தான் நாகசைதன்யா. கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைதன்யா மற்றும் சமந்தா அவர்கள் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தின் படி ஹிந்து முறைப்படி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

அதன் பிறகு நாகசைதன்யா அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்த சோபிதா துலிபலாவை தனது புது காதலியாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.இதைதொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் 8-ல் இவர்களுக்கு கோலாகலமாக நிச்சர்த்தார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது என அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல் ஆகியது. திருமணம் ஹைதராபாத்தில் நாகஅர்ஜுனாவின் சொந்த அன்னபூர்ணா ஸ்டுடியோவில் வைத்து நடைபெறுவதாக கூறியிருந்தார்கள். இவர்களின் திருமணத்திற்கு வெறும் 300 நபர்களுக்கு மட்டுமே இன்விடேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. டகுபதி, மெகா குடும்பங்கள்,மகேஷ் பாபுவின் குடும்பம், அமிதாப் பச்சன், ஆமிர் கான், பாலிவுட் நட்சத்திரங்கள், எஸ்.எஸ். ராஜமௌலி, மணிரத்னம் போன்ற பிரபலங்கள் கலந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
