கடவுளுக்கு நன்றி கூறி விட்டு தான் உணவு அருந்த வேண்டும் என… பெரியவர்களுக்கும் பாடம் புகட்டிய சிறுமி…

குழந்தைகள் ஒரு வயதில் நடக்க ஆரம்பித்தவுடன் நன்றாக பேசவும் ஆரம்பித்து விடுவார்கள். கிராமங்களிலும், நகரங்களிலும் அங்கவாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆரம்ப கல்வி செல்வதற்கு முன்பு ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இங்கு வாய் மொழி கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. தமிழ் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள், பாடல்கள், மற்ற குழந்தைகளுடன் ஒருங்கிணைந்து பங்களிக்கும் செயல்கள், நல்ஒழுக்கம், ஊட்டசத்தான உணவுகள், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் போன்றவை குழந்தைகள் நலன் கருதி கிராமங்களிலும், நகரங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் படி பாலர் பருவ குழந்தைகள் பலர் இதனால் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டமானது 1975-ம் ஆண்டு முதல் இந்திய அரசாங்கத்தால் நாடு முழவதும் செயல்பட்டு வருகிறது. கல்வியோடு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள் மதிய உணவாக குழந்தைகளுக்கு வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் முன்பு சிறுவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு உணவருந்த ஆரம்பிப்பார்கள்.

இங்கும் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த தயாரான நிலையில் சிறுமி ஒருவர் உணவளித்த கடவுளுக்கு நன்றி செலுத்திய காட்சிகள் சமூக வலைதளவாசிகளை நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. கெட்டிக்காரத்தனமாக செயல் பட்ட சுட்டி குழந்தையினை பலரும் பாராட்டி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்

You may have missed