சூப்பர்ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி… விரைவில் குணமடைய வேண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிவு….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென நள்ளிரவில் சிகிச்சைக்காக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வரும் 10 ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.


மேலும் அவர் இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். எப்பொழுதும் சினிமாவில் பிஸியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திடீரெனெ நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


73 வயதாகும் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஈசிஜி எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவர் இன்று மாலை வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.


மேலும் இந்த தகவலை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய x தள பக்கத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் விரைவில் குணம் அடைய விழைகிறேன்என பதிவிட்டிருந்தார். மேலும் சூப்பர் ஸ்டார்க்காக அவருடைய ரசிகர்களும் பிராத்தனை நடத்தி வருகிறார்கள் .

You may have missed