அமரன் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினருக்கு பிரியாணி போட்டு மகிழ்ந்த சிவகார்த்திகேயன்…

சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று வெள்ளித்திரையின் முதலிடத்தை பிடித்து வைத்திருக்கும் நாயகன் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தீபாவளி அன்று இறங்கிய படமான அமரன் இதுவரை காணாத பெரும் வெற்றியை அவருக்கு கொடுத்து வருகிறது. இப்படம் அவரின் கேரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்துள்ளது.

நிஜக்கதையை மையமாக கொண்ட இப்படத்தில் சாய்பல்லவி தனது எதார்த்தமான நடிப்பை காட்டியிருப்பார். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் நிலையில் இப்படத்தை ஓடிடி-யில் 8 வாரங்களுக்கு பிறகே வெளிவிட முடியும் என படக்குழுவினர் கூறி உள்ளனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு படம் நடித்து கொண்டுள்ளார்.

தற்போது இவர் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தன் படக்குழுவினருக்கு பிரியாணி அவர் கையாலையே வழம்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
