பிரட்களை பேப்பர், பிளாஸ்டிக் பைகளில் அடைத்துவைக்க இதுதான் காரணமா..? பலருக்கும் தெரியாத தகவல்..!

   பிரட்டைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் இரண்டு பிரட்களுக்கு நடுவே ஆம்லேட்டை வைத்து பிரட் ஆம்லேட் சாப்பிடுவது என்றால் பலருக்கும் கொள்ளைப் ப்ரியம். சர்க்கரை நோயாளிகளுக்கு என்று இப்போதெல்லாம் கோதுமை பிரட் பிரசித்தி ஆகிவிட்டது. 

 வழக்கமாகவே நாம் கடைகளில் பிரட் வாங்கும்போது பிளாஸ்டிக் கவர் அல்லது பேப்பர் கவரில் தான் அதை அடைத்துக் கொடுப்பார்கள். அதற்கு என்ன காரணம் என இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம் வாருங்கள். பொதுவாகவே மென்மையான பிரட், சொர சொரப்பான பிரட் என இதில் இருவகைகள் உண்டு. இதில் மென்மையான பிரட்டைத்தான் சாண்ட்விச், ரோஸ்ட், டோஸ்ட் போன்றவற்றிற்கு பயன்படுத்துகிறோம். இதைப் பதப்படுத்த பிளாஸ்டிக் வகை celofin பைகளில் பேக் செய்கிறார்கள். இதனால் ஈரப்பதம் புகாது. எளிதில் கெட்டுப்போகும் தன்மை கொண்ட இவை பிளாஸ்டிக் கவரில் வைக்கும் போது எளிதில் கெட்டுப் போகாமல் இருக்கும்.

  ஆனால் சொர, சொரப்பான பிரட்களைப் பொறுத்தவரை நீண்டகாலம் கெடாது. இதைப்பயன்படுத்து புலாவு, பிரியாணிகூட செய்யலாம். நீண்ட காலம் கெடாத தன்மை உள்ளதால் தான் இதை பேப்பர் பைகளில் வைத்தும் விற்கின்றனர். இதேபோல் பிரட் கவரை ஒருமுறை பிரித்துவிட்டால் அதை ஒரே நேரத்தில் பயன்படுத்திவிடுவதே நல்லது. 

 அப்படி மீதம் வந்தால் ப்ரிட்ஜில் வைத்துமட்டுமே பயன்படுத்தமுடியும். வெளியே வைத்தால் சில நேரம் பிரட்டில் பூஞ்சாண் தொற்று வந்துவிடும். 

You may have missed