இந்த சிறுவன் யார் தெரிகிறதா..??இதுவரை பிளாப் ஆகாத படங்களை கொடுத்து பாலிவுட்டில் 1000 கோடி வசூலை பெற்ற ஒரே தமிழ் இயக்குனர்…

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் அவர்களின் அசிஸ்டண்டாக எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் இருந்து ராஜா ராணி படத்தை இயக்கி குருவையே மிஞ்சிய சிஷியனாக தற்போது வளர்ந்து இருப்பவர் தான் அட்லீ. இவரின் படங்கள் எதுவும் இன்றுவரை பிளாப் ஆனது இல்லை. இவரின் முதல் படமே பயங்கரமான ஹிட் அடித்தது.

இதைத்தொடர்ந்து இவர் விஜய் அவர்களை வைத்து எடுக்கப்பட்ட தெரி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு 100 கோடி மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. இதன் வெற்றியின் காரணமாக விஜயை வைத்து படம் எடுக்க இவருக்கு இனொரு வாய்ப்பும் கிடைத்தது. அந்தவகையில் எடுக்கப்பட்ட மெர்சல் படமும் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இவர் விஜயை வைத்து எடுத்த பிகில் படமானது 300 கோடி மேல் வசூல் செய்து விஜய்-அட்லீ கூட்டணி ஹாட்ரிக் ஹிட் காம்போவாக உயர்ந்தது.

இவர் எடுக்கும் அனைத்து படங்களுமே வெற்றிகொடுத்தலும் இவரின் ஒவ்வொரு படமும் காப்பி செய்யப்பட்டது என அடிக்கடி நெட்டிசன்கள் ட்ரோல் செய்துதான் வருகிரார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக அட்லீ அவர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து கொண்டே வருகிறார்.

இவரின் வளர்ச்சியை பார்த்து பாலிவுட்டிலும் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தது.அதன் படி பாலுவிட்டில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து எடுத்த முதல் படமான ஜவான் படமே 1000 கோடி மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. தற்போது இவர் பாலிவுட்டில் பேபி ஜான் திரைப்பத்தை இயக்கி கொண்டுள்ளார். இவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.