இந்திய சினிமாவில் முதல் இடத்தை பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா-2… முதல் நாளிலே இவ்வளவு வசூலா..!!
2021ல் ராஸ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளிவந்து அமோக வெற்றியை அடைந்த படம் தான் புஷ்பா. இதன் வெற்றியை தெடர்ந்து புஸ்பா தி ரூல் என்று இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது. புஷ்பா1 தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது புஷ்பா2-வும் தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் வெளிவந்துள்ளது.
இப்பாகத்திலும் முதல் பாகத்தில் வந்தவர்களை நடிக்கிறார்கள். பகத் பாசிலே இதிலும் வில்லன் ரோலில் நடித்துளார். இப்படம் சுமார் 500 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. இயக்குனர் அட்லீ அவர்கள் புஷ்பா 2 படத்தை பார்த்துவிட்டு அல்லு அர்ஜுனை வாவ் சார் இப்படம் என்னுடைய இதயத்தை தொட்டு விட்டது. உங்களின் நடிப்பு மிக பிரமாதம். அடுத்தும் ஒரு பிளாக் பாஸ்டர் படத்தை கொடுத்ததிற்கு நன்றி. இயக்குனர் சுகுமார் மிக கடினமாக உழைத்து இருக்கிறார். ராஷ்மிக்கா நடிப்பால் மிரட்டியுள்ளார். பகத் பாசில் நீங்க lethal bro என மொத்த படக்குழுவினரையும் புகழ்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருந்தார் இயக்குனர் அட்லீ.
இந்நிலையில் இப்படம் முதல் நாளிலே கிட்டத்தட்ட 275 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படம் தான் இந்திய சினிமாவில் வசூல் இடத்தில் முதல் இருக்கிறதாம். இன்னும் இப்படம் 1000 கோடி மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.