பா.ஜ.க அண்ணாமலை அவர்களின் பாராட்டை பெற்ற சசிகுமாரின் நந்தன் மூவி….

0

சசிகுமார் அவர்களின் நடிப்பில் ரா சரவணன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம் நந்தன்.இப்படம் முழுக்க பட்டியலின மக்களை கொடுமைப்படுத்தி செய்யும் ஆட்சி கதைகளை கொண்டது.இத பலரும் பாராட்டி இருந்தனர்.தற்பொழுது பா.ஜா.க அண்ணாமலை அவர்கள் இப்படத்தை லண்டனில் இருந்து ஓடிடி பார்த்து உள்ளார்.

அதை தொடர்ந்து அவர் தனது ட்விட்டரில் படத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது,சர்வாதிகார ஆட்சியை மிக அழகாக காட்டியுள்ளது இப்படம் அதுமட்டுமின்றி ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் கஷ்டத்தை அழகாக எதார்த்தமான நடிப்பில் வெளிக்காட்டியுள்ளார் சசிகுமார் அவர்கள். அரசியலில் நடந்ததை அப்படியே காட்டியுள்ள ரா சரவணன் அவர்களையும் பாராட்டியுள்ளார்.

நந்தன் படம் எக்காலத்திலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்றும் கூறியுள்ளார். இதை பார்த்த சசிகுமார் அவர்கள் நன்றி தெரிவித்து உள்ளார்.ரா சரவணன் அவர்களும் உங்கள் குரல் மிகவும் பவர் உளது சார் உங்கள் கருத்து பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் மீது மிகுந்த அக்கறை தெரிவிக்கும் விதமாக உள்ளது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *