பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த போட்டியாளர்….. உற்சாகத்தில் சக போட்டியாளர்கள்…… ப்ரோமோ இதோ…..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. . தற்போது பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக தீபக்,அர்னவ்,ரஞ்சித்,ரவீந்தர் சந்திர சேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால்,நான் முத்துக்குமரன்,சத்யா, அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுண்டன்,சார்சனா, அன்ஷிதா, சுனிதா, RJ அனந்தி, ஜாக்லின், தர்ஷா குப்தா, பவித்ரா, ஜனனி, என 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு என்று பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தினமும் என்ன என்ன டாஸ்க் இருக்கும் என்பதை பார்பதற்கே மக்கள் விறுவிறுப்பாக இருப்பார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி தொகுத்து விளங்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் எலிமினேட் 24 மணி நேரத்தில் என்று அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மகாராஜா படத்தில் இவருக்கு மகளாக நடித்த சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். அவர் கண்ணீர் மல்க வெளியில் சென்றார்.

இந்நிலையில் ரசிகர்கள் இது சரி அல்ல இது திட்டம் இட்டு செய்யப்பட்டது என நெகடிவ் கமெண்ட்ஸ் குடுத்து வந்தனர். இந்நிலையில் ப்ரோமோ ஓன்று வெளிவந்தது. அதில் சாச்சனா மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அந்த ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாச்சனாவை மீண்டும் அழைத்து வந்ததற்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சந்தோஷத்தில் ஆரவாரபடுத்தினார்கள்.