கண்டஸ்டெண்ட் யாருமே செய்யாத செயலை செய்த தனலெட்சுமி… வியப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்..!

bigg-boss-dhanalakshmi-loves-biggi

டிக் டாக் ….தனலெட்சுமி, தற்போது பிக் பாஸ் தனலெட்சுமியாக அனைவருக்கும் தெரியும்படி பிரபலம் ஆகியுள்ளார். பிக் பாஸ் பங்கேற்பாளர்களில் சுவாரசியம் கூடிய பங்கேற்பாளராக வீட்டின் கலகலப்பிற்கு காரணமாக இருந்தார். இறுதி வரை பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் தீடீரென்று மக்களால் வெளியேற்றப்பட்டார்.

வறுமையின் பிடியில் இருந்த குடும்பத்தை தாய் மட்டுமே கடும் சிரமப்பட்டு குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். பிக் பாஸ் வருவதற்கு முன்பு டிக் டாக்கில் வீடியோவை பதிவு செய்து திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றும் வாய்ப்புக்காக ஒரு சில வருடங்கள் முயற்சிசெய்து வந்துள்ளார். விஜய் டிவி பிரபலம் ஒருவரின் உதவியின் மூலம் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்டார்.

பிக் பாஸில் பங்கேற்ற பிறகு தனலெட்சுமி யார் என்று தெரியாதவர்களுக்கும் தெரிய வந்தது இந்த நிகழ்ச்சி மூலம். துணிச்சல்,தைரியம், ஆண்களுக்கு நிகராக விளையாடும் திறமை என்று தனித்துவத்தோடு சிறந்து விளங்கினாலும் முன் கோபம் அவரின் குறையாக கருதப்பட்டது. முன் கோபம் கொள்வதை தவிர்த்து இன்முகத்தோடு விளையாட்டை விளையாடி இருந்தால் இறுதி வாரம் வரை தொடர்ந்திருப்பார்.

பிக் பாஸ் வீடு அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மிகவும் பிடித்த வீடாகும். உள்ள வந்தவர்கள் வெளியேறும் போது வீட்டை பிரிய மனமில்லாமல் வருந்துவார்கள். ஓவியா மற்றும் பரணி இருவரையும் தவிர இதுவரை பங்கேற்ற பங்கேற்பாளர்கள் வருத்தத்துடனே வெளியேறி இருப்பார்கள். பிக் பாஸ் சீசன்-5-ல் பங்கேற்ற தாமரை வீட்டை விட்டு போக மாட்டேன் என்று நிகழ்ச்சியில் அடம் பிடித்து அழுவார். அந்த வீட்டை எல்லோரும் நேசித்திருப்பார்கள்.

வெளியில் வந்த பிறகு தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருப்பார்கள். வெளியில் வந்த தனலெட்சுமி வாழ்க்கை முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியை மறக்க கூடாது என்பதற்காக பிக் பாஸ் லோகோவை கையில் பச்சை குத்திய சம்பவம் இணையத்தில் படு வேகமாக வைரல் ஆகி வருகின்றது. அந்த புகைப்படங்களை இங்கே காணலாம்….

You may have missed