சினிமாவிற்குள் வந்த பிறகு ஆளே மாறி இருக்கும் நயன்தாரா… வெளிவந்த போட்டோவால் அதிர்ந்த ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகி இன்று லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கும் அளவு உயர்ந்துள்ளவர் தான் நடிகை நயன்தாரா.இவர் கிட்டத்தட்ட 20 வருடங்களாகவே சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.வல்லவன் படத்தில் நடித்து எதிர் விமர்சனம் பெட்ரா நயன்தாரா பின் வில்லு படத்தின் மூலம் ஒரு நல்ல கம் பேக் கொடுத்தார்.

கடைசியாக இவரின் நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படம் ஒரு நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்றது. டெஸ்ட், மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் போன்ற படங்கலில் நடிக்க தற்போது நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார்.இதைத்தொடர்ந்து இவரின் வாழ்க்கை கதையை கூறும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale என்கிற ஆவணப்படம் நாளை வெளியாக உள்ளது.இப்படத்தை வெளியிட தனுஷ் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததென இதைப்பற்றி தான் தற்போது கோலிவுட்டிலிருந்து தென்னிந்திய சினிமா உலகில் பேசப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சினிமா வருமுன் நயன்தாரா அவர்கள் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்த புகைப்படம் வெளிவந்து வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதை பார்த்த ரசிக்கர்கள் நம்ம நயன்தாராவா இது ஆளே அடையாளம் தெரியாத அளவு இருந்துருகிற்காலே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
