BB 8 விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய பார்த்திபன்…! கூர்மைக்கார நண்பர் இவர் நெகிழ்ச்சி பதிவு !
இன்றய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிகராக மட்டும் தான் நடிப்பேன் என்று சொல்லாமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று கொண்டு நடிப்பார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடித்துள்ள படம் மகாராஜா. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்குவதற்கு தொகுப்பாளராக களம் இறங்கி உள்ளார். பிக் பாஸ் சீசன் 7 வரை நடிகர் கமலகாசன் தொகுத்த நிலையில் அவர் திடீரென விலகியதால் சீசன் 8 தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கினர். விஜய் சேதுபதி எப்படி நிகழ்ச்சியினை நடத்துவர் என மக்கள் மனதில் ஒரு சந்தேகம் இருந்த நிலையில் முதல் நாளிலே தூள் கிளம்பிவிட்டார்.
கடந்த ஞாயிற்று கிழமை இந்த நிகழ்ச்சி ஆரம்பித்தது ஆரம்பித்த உடனே அதிரடி என்பது போல 24 மணி நேரத்தில் எலிமினேஷன் உண்டு என கூறினார். அதன் படி மகாராஜா படத்தில் இவருக்கு பெண்ணாக நடித்த சச்சனாவை எலிமினேட் செய்தார். அதனை பலரும் இது திட்டமிட்டு நடந்தது என கூறுகின்றனர். மேலும் கமல் இடத்தை இவர் பிடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒரே நாளில் ஒட்டு மொத்த பிக் பாஸ் கூட்டத்தையும் தன் பக்கம் கொண்டுவந்துவிட்டார். போக போக பிக் பாஸ் போட்டியாளர்களை பின்னி பெடல் எடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் கமல் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகியதும் அடுத்ததாக தொகுத்து வழங்க இருப்பதாக நிறைய நடிகர்கள் பெயர் அடிபட்டது. அந்த நிலையில் நடிகர் பார்த்திபன் பெயரும் அடிபட்டது.
தற்போது நடிகர் பார்த்திபன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதாவது நான் எங்கயோ எப்போதோ கூறியதை கூறிய கவனக்கார நண்பர் இதனை நினைவு கூறும் பொது தன்னுடைய கவிதையின் கவுரவம் கூடுகிறது என்று கூறி இருந்தார். அதாவது விஜய் சேதுபதி பிக் பாஸ் ஆரம்பித்த முதல் நாளில் மக்களை ஈர்க்கும் விதமாக நிறைய தத்துவம் கவிதைகளை கூறி இருந்தார். அதில் பார்த்திபனின் கவிதைகளும் ஓன்று. தன்னுடைய கவிதைகளை ஞாபகம் வைத்து இவ்வளவு பெரிய மேடையில் அதனை பற்றி பேசியதற்காக நெகிழ்ச்சி அடைகிறேன் என்று விஜய் சேதுபதியை புகழ்ந்திருந்தார் நடிகர் பார்த்திபன்.