பிக் பாஸ் சாச்சனா நடிப்பையும் தாண்டி அவர் செய்யும் சுவாரசியமான வேலை என்ன தெரியுமா ….!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. . தற்போது பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தினமும் என்ன என்ன டாஸ்க் இருக்கும் என்பதை பார்பதற்கே மக்கள் விறுவிறுப்பாக இருப்பார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி தொகுத்து விளங்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் எலிமினேட் 24 மணி நேரத்தில் என்று அறிவித்திருந்தார்.

விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் அதன் மூலமாக பிக் பாஸ் சீசன் 8 ல் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து மகாராஜா படத்தில் இவருக்கு மகளாக நடித்த சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார்.அவர் கண்ணீர் மல்க வெளியில் சென்றார்.இந்நிலையில் ரசிகர்கள் இது சரி அல்ல இது திட்டம் இட்டு செய்யப்பட்டது என நெகடிவ் கமெண்ட்ஸ் குடுத்து வந்தனர். இந்நிலையில் ப்ரோமோ ஓன்று வெளிவந்தது. அதில் சாச்சனா மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அந்த ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாச்சனாவை மீண்டும் அழைத்து வந்ததற்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சாச்சனா பற்றிய தகவல் ஓன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அவர் நடிப்பதற்கு வருவதற்கு முன்பே ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தாராம். ஆமாம் அவர் ஒரு ஐடி ஊழியராம். ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறாராம் நடிப்பதற்கு வர வேண்டும் என்றால் அவர் அங்கு விடுமுறை எடுத்து கொண்டு தான் நடிக்க வருவாராம். இதனை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த தகவல் தான் இப்பொது இணையத்தில் பரவி வருகிறது. அது மட்டும் இல்லாமல் சாச்சனா ஐடி நிறுவனத்தில் வேலைபார்ப்பவரா. என்று அவருடைய ரசிகர்களும் ஆச்சரியத்தில் வியந்து அவரை பராராடிவருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed