என்ன சார் இப்படி பண்ணிட்டீங்களே….! BB8 எலிமினேஷன் பிறகு ரவீந்தர் வெளியிட்ட வீடியோ…!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் பார்வையாளர்கள் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தினமும் என்ன என்ன டாஸ்க் இருக்கும் என்பதை பார்பதற்கே மக்கள் விறுவிறுப்பாக இருப்பார்கள். இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. சீசன்7 வரை தொகுப்பாளராக நடிகர் கமலகாசன் நடத்தி வந்தார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகியதால். தற்போது சீசன் 8 நடத்துவதற்கு நடிகர் விஜய் சேதுபதி களம் இறங்கினார் .பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே மக்கள் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்துவிட்டார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் விஜய் சேதுபதி தொகுத்து விளங்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் எலிமினேட் 24 மணி நேரத்தில் என்று அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மகாராஜா படத்தில் இவருக்கு மகளாக நடித்த சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். அவர் கண்ணீர் மல்க வெளியில் சென்றார்.இந்நிலையில் ரசிகர்கள் இது சரி அல்ல இது திட்டம் இட்டு செய்யப்பட்டது என நெகடிவ் கமெண்ட்ஸ் குடுத்து வந்தனர். இந்நிலையில் ப்ரோமோ ஓன்று வெளிவந்தது. அதில் சாச்சனா மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அவர் இப்பொழுது பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து உள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலாவதாக எலிமினேஷன் ஆகி இருக்கிறார் இயக்குனர் ரவீந்தர். அவர் வெளியில் வந்த பிறகு பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இத்தனை நாட்கள் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி எனவும் நான் சொல்லாமல் பண்ணினத்துக்கே இப்படி செஞ்சிட்டீங்களே சொல்லியிருந்தால் எண்ணலாம் பண்ணிருப்பீர்கள் என்றும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *