இணையத்தில் ஆரம்பித்த BB8 சர்ச்சை…தந்திரமாக PR வேலையை தொடங்கியஅர்னவ் ரசிகர்கள்…! இருந்தாலும் சப்போர்ட் ரஞ்சித்துக்கு தான்…

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது.நேற்றைய தினம் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். மேலும் இதில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்றய தினம் 24 மணி நேரத்திற்க்குள் ஒருவர் வெளியேற்றப்படுவர் என்ற டாஸ்கின் அடிப்படையில் தற்போது வெளிவந்த மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சச்சனா கண்ணீர் மல்க வெளியேறினார். இது சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் நடித்த அர்னவ் சென்றிருந்தார். அவர் வீட்டிற்க்குள் செல்வதற்கு முன்பு வெளியில் பணம் குடுத்து PR வேலை பார்ப்பதற்கு ஆட்கள் செட் பண்ணி வைத்து விட்டு தான் வந்துள்ளார். என இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாயா மற்றும் அர்ச்சனா இதே போல் PR வைத்து அதிகளவில் ஓட்டுகளை தன் வசம் படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அர்னவும் ஓட்டுக்காக காசு கொடுத்து PR வேலையை ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அர்னவ் போஸ்ட்களை அதிகளவில் பகிர்ந்தவர்கள் அர்னவ் போட்டோ போடாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளரான நடிகர் ரஞ்சித் போட்டோவை போட்டு உள்ளனர். இது குறித்து தற்போது இணையத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed