விடுமுறையில் சுறாவுடன் மாலத்தீவில் நீச்சல் அடித்த BB2 வின்னர் ரித்விகா..!!

தமிழ் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் முன்னேறி வந்தவர்களுள் ஒருவர் தான் ரித்விகா. இவர் மெட்ராஸ் மற்றும் தான சேர்ந்த கூட்டம் படத்திலும் கலையரசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் இவருக்கு மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பு இருந்தது.

இதை தொடர்ந்து இவர் பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.ஒரு நாள் கூத்து படத்தில் 2ஆவது கதாநாயகியாகவும் வந்தார்.பின் இவர் BB2-வில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து வாக்குகளை சேமித்து வெற்றி கோப்பையை தட்டி சென்றார்.இதைத்தொடர்ந்து இவருக்கு படங்களில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் இவர் சினிமாவை விட்டு விலகியே இருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் தீபாவளி போனஸ் படம் வெளியாகியது. தற்போது இவர் விடுமுறை கொண்டாட நண்பர்களுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு சுறா மீன்களுடன் நீந்தியவாறு வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வியந்து பார்த்ததுடன் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
pic1

pic2

pic3

pic4
