பயில்வான்-க்கு பண ஆசையாக இருக்கலாம்… யாரும் அவரை திட்ட வேண்டாம்… கேட்டு கொண்ட வெங்கடேஷ் பட்….

குக் வித் கோமாளியில் நடுவராக பொறுப்பேற்றதின் மூலம் விஜய் டிவி யில் பிரபலமாகி மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர்தான் செஃப் வெங்கடேஷ் பட். இவர் குக் வித் கோமாளி சீசன் 1ல் இருந்து 4வரை நடுவராக இருந்தார். தற்போது நடந்து முடிந்த சீசன் 5 யின் தொடக்கத்திலே விஜய் டிவியை விட்டு வெளியேறி சன் டிவி சென்றார்.

அங்கு டாப் குக் டூப் குக்-ல் நடுவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் வெளியிட்டிருந்த பதிவில் எனக்கும் விஜய் டிவி-க்கும் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையா. ஆனால் நான் மீடியா மெஷின்-க்கு கடமை பட்டிருக்கேன் என்னை வளர்த்து விட்டவர்கள் அவர்கள் தான். அதனால் அவர்கள் எங்கு செல்கிறார்களோ அங்கு நானும் செல்வேன் என்று கூறி இருந்தார்.

இதனை தொடர்ந்து வெங்கடேஷ் பட் அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பயில்வான் ரங்கநாதன் தன்னைப்பற்றி சர்ச்சை கிளப்பி பேசியதாகவும், தயவு செய்து யாரும் அவரை திட்ட வேண்டாம் அவர் இதை பணம் சம்பாதிக்க ஒரு வழியாக பயன்படுத்துகிறார். இல்லையெனில், அவருக்கு மனநிலை பாதிக்க பட்டிருக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

தொடர்ந்து பயில்வான் அவர்கள் சினிமா பிரபலங்களை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அவர் விருப்பத்திற்கேற்ப கதை எழுதி சர்ச்சை கிளப்புவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் வெங்கடேஷ் பட் இப்படி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.