ஆட்டோகிராப் பட கோபிகாவா இது..!! கொழுகொழுவென இருந்தவர் இப்படி இளைத்துவிட்டாரே…

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் தான் நடிகை கோபிகா அவர்கள்.இவர் தமிழில் ஆட்டோகிராப், தொட்டி ஜெயா, எம்டன் மகன், கனா கண்டேன் போன்ற படங்களில் நடித்து தென்னிந்திய சினி உலகில் பீக்கில் இருந்த நடிகைகளுள் ஒருவர்.

இந்நிலையில் இவர் 2008 ஆம் ஆண்டு அஜிலேஸ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அதை தொடர்ந்து இவர்களுக்கு அழகான இரு குழந்தைகளும் உள்ளனர்.இதனைத்தொடர்ந்து கோபிகா அவர்கள் அதீத நேரம் குடும்பத்துடன் செலவழித்து வந்தார்.

தற்போது இவர் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.இதில் அவர் பார்ப்பதற்கு மிகவும் மெலிந்து காணப்படுகிறார்.இதை பார்த்த ரசிகர்கள் கொழுகொழுவென இருந்த எங்கள் கோபிகாவா இது இப்படி இளைத்து போய்விட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.