அட்டக்கத்தி தினேஷா இது..? அட்டகத்தி படத்திற்கு முன் நடிகர் ஜீவாவின் படத்தில் நடிக்கும் போது எப்படி இருக்கிறார் பாருங்க …

2012ம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தின் படத்தின் மூலம் மக்களின் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் அட்டகத்தி தினேஷ். அதிலிருந்தே இவரை அனைவரும் அட்டகத்தி தினேஷ் என்று தான் கூறுகின்றனர். ஆனால் இவர் அட்டகத்தி படம் வருவதற்கு முன்பே ஜீவாவின் ஈ படத்திலும் தனுஷின் ஆடுகளம் படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த அட்டகத்தி படம்தான் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதன் பிறகு இவர் நடிப்பில் வெளி வந்த இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது மட்டும் இல்லாமல் கதைக்கு ஏற்றவாறு தன் உடலையும் வருத்தி கொண்டும் நடிப்பார்.

தற்போது அவர் நடித்து திரைக்கு வந்த லப்பர் பந்து படம் வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் சினிமா துறையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அந்த படம். இந்த நிலையில் அவர் முதன் முதலாக நடித்த படத்தின் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ரசிகர்கள் அவரது போட்டோஸ்களை ஷேர் செய்தும் லைக் பண்ணியும் வருகிறார்கள்.
