காந்தம்போல் எளிதில் கவரும் தன்மை உடைய ராசியினர்…. யார்! யார்! இதோ பார்க்கலாம் வாங்க…!

பொதுவாக ஒருவர் பிறந்த நேரம் நட்சத்திரம் ராசி பலன்களை வைத்து அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை எண்ணங்களை கணிபார்கள். அந்த வகையில் ஜோதிட படி இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எளிதில் அடுத்தவர்களை கவரும் தன்மை இருக்குமாம்.காந்தம் போல் எளிதில் அடுத்தவர்களை ஈர்க்கும் தன்மை உடையவர்களாக இருப்பார்களாம் .யார்யார் அந்த ராசிக்காரர்கள் என பார்க்கலாம்.

மீனம் ராசியில் பிறந்தவர்கள் பொதுவாகவே அடுத்தவர்களை ஈர்க்கும் முக பாவனையும் வசீகர கண் தோற்றமும் கொண்டிருப்பார்களாம். இவர்கள் இயற்கையாகவே மென்மையான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்களாம். மேலும் இவர்கள் இரக்க குணம் உடையவர்களாகவும் அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடையவர்களாகவும் இருப்பார்களாம். இவர்களின் இந்த குணமும் அழகிய தோற்றமும் அடுத்தவர்களை ஈர்க்கும் தன்மை கொண்டுஇருக்குமாம். மேலும் இவர்கள் தனக்கென்று ஒரு கற்பனை உலகம் உருவாக்கி கற்பனையிலே அதிகளவில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களாம்.

தனுசு ராசியில் பிறந்தவர்கள் அதிகளவில் சுதந்திரமாக சுற்றி திரிய ஆசைப்படுபவர்கள். சுதந்திர பறவையை போல எப்பொழுதும் சுதந்திரமாக வலம் வரவேண்டும் என நினைப்பார்கள். மேலும் இவர்கள் யாருடைய கையினுள்ளும் அகப்பட்டு இருக்கமாட்டார்கள். மேலும் இவர்கள் நீண்ட காலம் ஒரே உறவில் நிலைத்து இருப்பதும் சாத்தியமான ஒன்றாம். எப்பொழுதும் வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவதால் அனைவரையும் எளிதில் கவரும் தன்மை உடையவர்களாகவும் இருக்கிறார்களாம்.

மிகவும் அழகான தோற்றம் உடைய மேச ராசிக்காரர்கள் இவர்கள் வெளியில் நடந்து சென்றாலும் அனைவருடைய கண்ணும் இவர்கள் மேல் தான் இருக்குமாம். அந்த அளவிற்கு அழகு நிறைந்த தன்மை உடையவர்களாக இருப்பார்களாம். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி கொள்ளை கொண்ட அழகாக இருப்பார்களாம். மேலும் இவர்களின் தனித்தன்மை வாய்ந்த இயல்பு அனைவரையும் எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்குமாம்.

மிகவும் பொறுமை தன்மை கொண்ட துலாம் ராசி காரர்கள் இவர்கள் எளிதில் யாரிடமும் கோவப்படமாட்டார்கள் மென்மை தன்மை கொண்ட இவர்கள் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். இவர்களின் இந்த சாந்தமான குணம் எளிதில் அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும். என ஜோதிட வித்துவான்கள் கூறுகிறார்கள்.