அப்பா விஜயகுமார் மற்றும் மனைவி, குழந்தைகள் என தீபாவளி கொண்டாட்டத்தில் அருண்விஜய் குடும்பம்… வைரலான போட்டோஸ்…

70s காலத்தில் மிகப்பெரிய கதாநாயகனாக இருந்த முன்னணி நடிகர்களுள் ஒருவர்தான் விஜயகுமார். இவர் தனது சக நடிகையான மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகளில் ஒருவர் தான் அருண்விஜய். இவருக்கு தந்தை சினிமாவில் உச்சத்தில் இருந்தும் கூட சினிமாவில் பெரிதளவு வெற்றி கிடைக்கவில்லை

இவரின் சினிமா தோல்விகளை இவர் பெரிது படுத்தாமல் அதனை வெற்றிக்கான படிகள் என்று நினைத்து கொண்டு போராடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அஜித்திற்கு வில்லனாக நடித்த இவரின் என்னை அறிந்தால் படம் இவரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இவர் நடிப்பில் வெளிவந்த யானை மற்றும் மிஷன் படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இப்போது இவரின் நடிப்பில் ரெட்டை தலை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இவர் அவரின் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடியுளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இதில் அவரின் குழந்தைகள் மனைவி மற்றும் அப்பா என புகைப்படங்கள் பார்ப்பதற்கே மிக அழகாக உள்ளது.

You may have missed