விஜய் சேதுபதியை பார்த்து முறைத்த அருண்… எலிமினேஷனில் மாட்டுவாரா..!! பதட்டத்தில் ரசிகர்கள்…

விஜய் டீவியில் செப்டம்பர் மாத இறுதியில் கோலாகலமாக தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ தான் பிபி-8. கடந்த 7 வருடங்களாக இந்த ஷோவை உலக நாயகன் கமல் காஷன் தொகுத்து வழங்கினார். ஆனால் தற்போது இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வருகிறார். இதில் போட்டியாளராக 18 நபர்கள் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் கார்ட் மூலம் ஆட்கள் உள்ளே வந்து கூட எலிமினேஷன் செய்வதன் மூலமாக தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருந்தார்கள்.

இந்நிலையில் இந்த வார எலிமினேஷனில் இரு பெண்கள் என ஆனந்தி மற்றும் சாச்சனா இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது 60 நாட்களை இவர்கள் BB வீட்டினுள் வெற்றிகரமாக கடந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று சௌந்தர்யா மற்றும் ஜாக்லினை VJS சரமாரியாக கேள்வி கேட்டு சரியாக விளையாட முடியலைனா சொல்லுங்க கதவை திறக்குறேன் வீட்டை விட்டு வெளியேறியலாம் என கூறி இருப்பார்.

பின்னர் யார் விளையாடிய டாஸ்க் உங்களுக்கு பிடிக்கவில்லை என விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் கேட்டிருப்பார். அதற்க்கு அருண் மட்டும் மஞ்சரியை குறி பார்த்து குறை கூறி கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் சேதுபதி அவர்கள் நான் கேட்டதுக்கு பதில் இது இல்லை என அருணிடம் கூறி உட்கார சொன்னார். இதனால் அருண் VJS-ஐ முறைக்கவே ஏன் என்னை பார்த்து முறைக்கிருங்க அருண் என விஜய் சேதுபதி கேட்டார். இதற்க்கு நான் முறைக்கவில்லை சார் என கூறி அமர்ந்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகவே ரசிகர்கள் அனைவரும் ஒருவேளை இந்த வார அருண் தான் வெளிவருவாரோ என கேள்வி எலிப்பி வருகிறார்கள்.

You may have missed