விவகாரத்தில் முடிந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா திருமணம் காதலில் ஏற்படவில்லை… அம்மாவின் விருப்பத்தால் நடந்த திருமணம் தான்…

தமிழில் மட்டுமில்லாமல் பல மொழிகளில் இசையமைத்து இந்தியாவிற்கு ஆஸ்கார் வாங்கி பெருமையை தேடி தந்தவர் தான் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள். தற்போது சோசியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா விவகாரத்து பற்றி தான் பரபரப்பாகா பேசப்பட்டு வருகிறது.

இவரது பாடலுக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. முக்கியாமாக இவரின் காதல் பாடல்கள் அனைத்துமே கேட்க கேட்க அவ்வளவு அருமையாக இருக்கும். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா அவர்களின் திருமண வாழ்க்கை 29 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தற்பொழுது விவகாரத்தை பெற இருக்கிறார்கள் இருவருமே. இந்நிலையில் ரகுமான் அவர்கள் முன்னொரு சமயத்தில் அளித்த பேட்டியில் அவரது திருமணம் காதல் திருமணம் இல்லை என கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் பாடல்களுக்கு இசையமைப்பதில் பிசியாக இருந்ததால் அவரின் 29 வயதில் அவரது அம்மாவிடம் எனக்கு காதலிக்கெல்லாம் நேரமில்லை நீங்களே பொண்ணு பாருங்கள் எனக்கு சிம்பிள் ஆக தொந்தரவு தராத பெண்ணாக இருந்தால் மட்டும் போதும் அப்போது தான் நான் இசையமைக்க முடியும் என்று கூறி உள்ளார். பின் இவரின் அம்மா ஒரு தர்கா அருகே சாய்ராவின் அக்காவிடம் பேசியுள்ளார்.பின்னரே பெரியவர்களின் விருப்பப்படி இவர்களின் திருமணம் நடந்துள்ளது.

You may have missed