மனைவிக்கு bye bye…BB8 வீட்டிற்குள் அன்ஷிதாவுடன் ஜோடி போட்டு என்ட்ரி கொடுத்த அர்னவ்….ட்ரெண்ட் ஆகும் வீடியோ…!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது.தற்போது பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். மேலும் இதில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களையாக அறிமுகம் செய்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் நடித்து சர்ச்சை ஜோடிகளான அர்னவ் மற்றும் அன்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆகி இருக்கிறார்கள். அர்னவ் ஏற்கனவே சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிவிட்டு அவரை விட்டு பிரிந்தார். இவர்கள் இருவருக்கும் நடுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர். மேலும் அர்னவ்க்கும் திவ்யாக்கும் தொடர்பு இருப்பதாகவும் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாகவும் அர்னவ் மீது திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் அர்னவ் கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமினில் வெளியில் வந்தார். அதன் பின்னரும் செல்லம்மா சீரியலில் நடித்து கொண்டிருந்தார்.

மேலும் திவ்யாக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகும் அர்னவ் தன்னுடைய குழந்தையை கூட பார்க்கவரவில்லை என திவ்யா பல பேட்டிகளில் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது அன்ஷிதா திவ்யாக்கு கால் செய்து ஐ லவ் அர்னவ் என்று கூறிய வீடியோ ஆடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இதற்கிடையில் அர்னவ் மற்றும் அன்ஷிதா ஜோடியாக பிக் பாஸ் வீட்டிற்க்குள் என்ட்ரி கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையாகவும் மேலும் கேலியும் கிண்டலுமாக நெட்டிசென்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed