அமரன் படத்தால் தொடர்ந்து பாராட்டு… ஆர்மி அகாடமி நபர்களால் கௌரவிக்கப்பட்ட சிவகார்த்திகேயன்…
தீபாவளியன்று ராஜ்குமார் பெரியசாமி அவரின் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் அமரன். இப்படம் இன்றுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் சாய்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்திருப்பார்கள். இப்படம் கிட்டத்தட்ட 300 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் முழுவதுமே மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு.இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் கடுமையாக உழைத்திருப்பார். முறையான துப்பாக்கி சூடு பயிற்சியின் பிறகு தான் படத்தில் நடிக்க ஆரம்பித்ததாக ஒரு பெட்டியில் சிவகார்த்திகேயன் கூறியிருப்பார். இப்படத்தை கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரித்தது.
படக்குழுவினரை தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் பல அதிகாரிகள் பாராட்டி வந்தனர். அந்த வரிசையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் கூட சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து பாராட்டியிருப்பார். இந்நிலையில் தற்போது ஆர்மி பயிற்சி அகாடமியை சேர்ந்த அதிகாரிகள் நடிகர் சிவகார்த்திகேயனை மேஜர் முகுந்த் வரத்தான் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்ததாக கூறி நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்துள்ளனர். இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளது.