பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன அர்ச்சனா.. வைரலாகும் பதிவுகள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில்  ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. . தற்போது பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த அருண் பிரசாத் கலந்து விளையாடி வருகிறார். இவர் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர். மேலும்  ராஜா ராணி பாகம் 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில்  தன்னுடைய நடிப்பை கச்சிதமாக நடித்தவர் தான் அர்ச்சனா.

 வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சீரியலில் நடித்து கொண்டிருந்த இவர் பாதியில் சீரியலில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு பிக் பாஸ் 7 ல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக பிக் பாஸ்ல் நுழைந்து டைட்டில்ம் வெற்றி பெற்றார். இவருக்கும் பிக் பாஸ் சீசன் 8 அருண்க்கும் இடையில் காதல் இருப்பதாக பல தகவல்கள் பரவி வந்தன.

 இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய பிறந்த நாளை அருண் கொண்டாடும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி உள்ளார் அர்ச்சனா. அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்தை வெளியிட்டுள்ளார். மேலும் இவரின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் அருண்க்கு  அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்தையும் கூறி வருகிறார்கள்.

You may have missed