ஏ.ஆர்.ரகுமான் டைவர்ஸ்… அது எப்படி திமிங்கலம்..?? யாருக்கு டைவர்ஸ் என்றாலும் அதில் தனுஷ் பெயர் அடிபடுகிறது… தனுஷை கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்…

தற்போது தொடர்ந்து திரை பிரபலங்களின் விவகாரத்து என்பது மிக சாதாரணமான விஷயமாக தான் இருக்கிறது. ஜிவி பிரகாஷ் – சைந்தவி, இமான் – மோனிகா, ஜெயம் ரவி – ஆர்த்தி என இந்த லிஸ்டில் தற்போது ஏ.ஆர்.ரகுமான்-சாய்ராவும் வருகிறார்கள்.திருமணம் ஆகி 29 வருடங்கள் ஆன நிலையில் இப்பொது கருத்து வேறுபாடு என கூறி இருவரும் விவகாரத்து கேட்பது ரசிகர்களை வியப்பில் தள்ளியுள்ளது.

இவர் உலகளவில் பேமஸ் ஆன இசையமைப்பாளர் ஆவார். 1995ல் திருமணம் ஆன இவர்களுக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதைப்பற்றி ஏ.ஆர்.ரகுமானின் மனைவி வெளியிட்ட பதிவில் பல வருடங்கள் திருமண வாழ்க்கையின் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் மிக கடினமான முடிவை எடுத்திருக்கிறேன். எங்களுடைய உறவில் அழுத்தம் உருவானதால் ஆழமான அன்பை வைத்திருந்தாலும் பதற்றங்களும், சிரமங்களும் எங்களுக்கிடையே தீர்க்க முடியாத ஒரு இடைவெளியை உருவாக்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இணையவாசிகள் வழக்கம்போல் இந்த விவகாரத்திலும் தனுஷை இழுத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் கடைசியாக இசையமைத்து வெளியான படம் தான் தனுஷின் ராயன். இதற்க்கு முன்னால் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி, ஏ.எல்.விஜய் மற்றும் அமலா பால் ஜோடிகளின் விவாகரத்திலும் தனுஷின் பெயர் அடிபட்டது. தனுஷ் படத்திற்கு கடைசியாக இசையமைத்ததால் தான் இருவருக்கும் டைவர்ஸ் ஏற்பட்டுள்ளது தனுஷின் ராசியே சரி இல்லை என இணையவாசிகள் கலாய்த்து கொண்டு வருகின்றனர்.

You may have missed