TVK கட்சியின் முதல் மாநாட்டின் பின் செல்லுமிடமெல்லாம் விஜயை சீண்டும் சீமான்… ரஜினியின் திட்டமாக கூட இருக்கலாம்… கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள்…
சினிமாவில் இருந்து பிரபலங்கள் அரசியலுக்குள் வருவது காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதேபோல் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் விஜய் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று பட வாய்ப்பையெல்லாம் உதறி விட்டுவிட்டு தற்போது அரசியல் நோக்கி வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னால் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி அதற்கென ஒரு கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். கடந்த செப்டம்பர் 5ல் கட்சியின் முதல் மாநாடு கோலாகலமாக நடந்தது.
ஆனால் அந்த மாநாடு வரை விஜய் தம்பி அரசியலுக்கு வர வேண்டுமென்று கூறிய சீமான் அவர்கள் மாநாடு முடிந்ததில் இருந்து விஜயை விமர்சித்து கொண்டே வருகிறார். அதற்க்கு காரணம் இதுவரை எந்த மாநாட்டிற்கு கூடாத கூட்டம் கூடியது தான். கிட்டத்தட்ட 14 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அதில் ககலந்து கொண்டனர். அந்த மாநாட்டை தொடர்ந்து பலரும் விஜயை விமர்சித்திருந்தனர்.அதை தொடர்ந்து சீமான் அவர்கள் தம்பி நீங்க குட்டிகதையெல்லாம் சொல்ல வேண்டாமென்று பயங்கரமாக பேசியிருந்தார். மேலும் உங்களுக்கு வரலாறே தெரியாது எனவும் கலாய்த்து இருந்தார்.
இதை தொடர்ந்து ரஜினி மற்றும் சீமானின் சந்திப்பு சிறுது பரபரப்பை ஏற்படுத்தியது.ராஜி அரசியலில் நுழைய போகிறேன் என்ற பின் சீமான் ரஜினியை மேடையில் தாக்கி பேசுவார் இதனாலே இருவரும் எதிரும் புதிருமாக இருந்தனர். ஆனால் இவர்களின் திடீர் சந்திப்பு விஜயை எதிர்ப்பதற்காக இருக்குமோ என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தற்போது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பாஜாகாவுடன் வருகிற தேர்தலில் கூட்டணி போடபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.