விறு விறுப்பாக செல்லும் நாமினேஷன் Free pass டாஸ்க்… போட்டியில் ஜெயிப்பதற்காக அன்ஷிதாவை கலாய்த்த தர்ஷிகா… உனக்கு அறிவு இருக்கா டி என கோபத்தில் கத்திய அன்ஷிதா…
தொடர்ந்து 7 வருடங்களாக உலகநாயகன் கமகாசன் அவர்களால் தொகுப்பட்டு வெற்றியை தந்த பிக் பாஸ் ஷோ இந்த வருடம் விஜய் சேதுபதி அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. 2 ,மாதங்கள் முன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 மிகுந்த நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஷோ தற்போது ஒவ்வெரு நபராக எலிமினேஷன் ஆகி குறைந்து கொண்டே வருகிறார்கள். இன்றுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, சிவக்குமார் ஆகியோர் எலிமினேஷன் ஆகி வெளியே சென்றுள்ளார்கள். சில நபர்கள் வைல்ட் கார்ட் மூலம் உள்ளேயும் வந்துள்ளார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நாமினேஷன் free pass டாஸ்க் நடத்த டெவில் மற்றும் ஏஞ்சல் போட்டி ஒன்று நடத்தியுள்ளது.
இதில் ஏஞ்சலாக இருக்கும் நபர்களை கோபப்படுத்தி அவர்களிடம் இருக்கும் நட்சத்திரங்களை பறிக்க வேண்டும் டெவிலாக இருப்பவர்கள். இதற்காக தர்ஷிகா அன்ஷிதாவை மிகவும் வெறுப்பேத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்ஷிதா உனக்கு அறிவு இருக்கா டி என தர்ஷிகாவை கத்தி விட்டு நட்சத்திரத்தை தூக்கி எறிந்துள்ளார். தற்போது இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.