இந்த பாசத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை… புகுந்த வீட்டிற்கு வழி அனுப்பும் ஓர் அண்ணனின் தவிப்பு..!

annan-tangai-pasam-mariage-time

அண்ணன் தங்கை பாசத்தை ஊருக்கே உணர்த்திய சம்பவம்…….டாம் அன்ட் ஜெரியாக இருந்த உறவா என வியந்த உற்றார் உறவினர்…….அவர்களையும் கலங்க வைத்த திருமண வைபவம்…..
‘டாம் அன்ட் ஜெரி’ கார்ட்டூன் காமெடி நிகழ்ச்சி அனைவருக்கும் பிடித்தமான சுவாரசியமான பொழுதுபோக்கு …….அது போலவே நிறைய இல்லங்களில் நிஜ ‘டாம் அன்ட் ஜெரி ‘உறவுகள் இருக்கும்….பெற்றோர்களுக்கு வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்கும் உறவுகள் அண்ணன் தங்கை உறவு….ஒரு நாளைக்கு கூட சண்டை சச்சரவு இல்லாத நாளே இருக்காது. அப்படி ஓன்று நடந்தால் இருவரில் யாரேனும் ஒருவர் வெளியூர்க்கு சென்றிருப்பார்கள். அன்று அந்த வீடே நிசப்தம் ஆகி விடும். அண்ணன் இல்லாத வீடு தங்கைக்கும், தங்கை இல்லாத வீடு அண்ணனுக்கும் நாளை கழிப்பதற்குள்…….போர் அடிக்கிறது என்றும் பெற்றோரிடம் கூறி கொண்டே இருப்பார்கள்.

திருமணத்தில் நடைப்பெறும் சுவாரசியமான நிகழ்வுகள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாக மாறும். திருமணத்தில் மணமகன் மணமகள் செய்யும் சேட்டைகள், ஆடல் பாடல் போன்றவைகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் மறு வீட்டிற்கு செல்லும் போது மகளை வழியனுப்பும் போது பெற்றோர்கள் வருந்துவதும், மகள் தந்தையை பிரிய மனமின்றி வெளிக்காட்டும் உணர்வுகள் பலரையும் கலங்கடித்துள்ளது. அதே போன்று அண்ணன் தங்கை உறவும் அப்பா மகள் உறவு போல் தங்கையை பிரிய முடியாமல் அண்ணன்கள் தவிப்பும் மக்களிடம் பிரபலமடைவது உண்டு. தங்கள் குடும்பத்தில் நடந்தது போன்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படுவது இயல்பு.

அண்ணன் தங்கை உண்மையான அன்பை…… தங்கை திருமணம் முடித்து புகுந்த வீட்டிற்கு வழி அனுப்பும் போது வெளிப்படும் கண்ணீரில் அந்த அன்பை வெளிப்படுத்துவார்கள்……அது போல் ஒரு அண்ணன் தங்கை பாசத்தை இந்த காணொலியில் காணலாம்……

You may have missed