தன் 20 வயது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்தின் ரீல் மகளான அனிகா… வைரலாகிய புகைப்படங்கள்…

குழந்தை நட்சத்திரமாக சினிமாவினுள் அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து இருக்கும் நடிகை தான் கேரளாவை சேர்ந்த நடிகை அனிகா. இவர் அஜித் மற்றும் த்ரிஷாவின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் இவரின் நடிப்பு மிகவும் பேசும் விதத்தில் இருந்தது.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

இவர் தமிழ் மற்றும் மலையாள படங்கள் பலவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இதனை தொடர்ந்து மறுபடியும் இவர் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்தார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் அஜித்தின் மகளாக நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் எனலாம். இதனை தொடர்ந்து அவ்வப்பொழுது போட்டோ சூட்டும் நடத்தி வந்தார். இந்நிலையில் சில படங்களில் மிக கவர்ச்சியான கதாநாயகியாகவும் நடித்து வந்தார்.

சிறு வயதிலே மிக அருமையான நடிப்பின் மூலம் வளர்த்துள்ளார். தற்போது தனுஷ் இயக்கத்தில் வெளிவர உள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது அம்மாவுடன் தன் 20 ஆவது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இப்புகைப்படங்களிலும் இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துகளை தூவி வருகின்றனர்.
