மகனின் ஆசைக்காக தாய் செய்த செயல்… வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பின் வெளிப்பாட்டை பாருங்க…!
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே பாடல் தந்தையின் பாசத்தையும் நேசத்தையும் உணர்வு பூர்வமாக விளக்கும் பாடல். தெய்வமும்….தந்தையும்…..கைவிட்டாலும் தன்னுடைய விடா முயற்சியினால் குழந்தைகளை வளர்த்து பேரும் புகழும் அடையும் வண்ணம் ஆளாக்குவது தாய் தான். தாய் தன்னுடைய எல்லா குழந்தைகளையும் ஒரே மாதிரி தான் வளர்ப்பார்கள் ஆனால் உடலில் குறைபாடு உள்ள, நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் மேல் அதிக கவனம் செலுத்துவார்கள். பலவீனமான குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி மனதிற்குள் வருத்தம் கொள்வார்கள். அவர்களின் எதிர்காலம் சிறப்புற வேண்டி அவர்களின் நலனுக்காக கடும் முயற்சிகள் எடுப்பார்கள்.
ஏழ்மையில் பிறந்து பின்னாட்களில் பேரும் புகழையும் சம்பாதித்த பல பிரபலங்கள் தங்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தங்கள் அன்னையே என்று கூறியிருக்கிறார்கள். போர்ச்சுகல் கால் பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்கள் தான் இந்த உயரத்தை எட்டியதற்கு தன் தாய் தான் என்றும் வீடுகளில் வேலை செய்து தான் தங்களை கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் தெரிவித்திருப்பார்.
நம் தமிழ் சினிமாவில் கூட அன்னை பற்றிய பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும், மேலும் இந்த பாடல்கள் தங்கள் தாய் எவ்வளவு அன்பு தன் குழந்தை மேல் வைத்திருந்தால் அவர்கள் இந்த பாடலை விரும்புவார்கள் என்று தெரியும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மன்னன் படத்தில் இடம் பெற்ற பாடலான அம்மா என்றழைக்காத உயிரில்லையே…….என்ற பாடலும்……நடிகர் ஜீவா நடிப்பில் சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் ராம் படத்தில் இடம் பெற்ற ஆராரிராரோ……நான் இங்கு பாட என்ற பாடலும்….ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்த வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா…… பாடல் நடிகை சீதா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வியாபாரி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை….இந்த பாடல்கள் அனைத்தும் அவரவரின் அன்னையை பிரதிபலிக்கும் உணர்வுகள் ஆகும்.
இங்கு ஒரு தாய் தன் குழந்தையின் குறையை குறைவின்றி சரி செய்ய குழந்தையை விடா முயற்சியுடன் விளையாட்டில் ஊக்குவிப்பதுடன் கூடவே இருந்து வழிகாட்டியாக நடந்து கொள்ளும் காணொலி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது……தெய்வத்தையும் மிஞ்சிய கருணை,பாச போராட்டத்தை எடுத்து காட்டிய காட்சிகள் என சமூக வலைதளவாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்…..அந்த காணொலியை இங்கே காணலாம்
தாய், தந்தை, குரு, தெய்வம்..
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 1, 2023
வரிசையில்….
தாய்க்கு ஏன் முதலிடம் என்று தெரிகிறதா?🙏🙏🙏 pic.twitter.com/5fx5tzW7IU