மோகினி டே தான் ஏ.ஆர்.ரகுமான் விவகாரத்திற்கு காரணமா..?? கிளம்பிய சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த ரகுமான் மகன் அமீன்…

இந்தியாவில் பல மொழிகளில் இசையமைத்து ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவிற்கு பெருமை வாங்கி தந்தவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.தற்போது சில தினங்களாகவே இவருக்கும் இவரின் மனைவி சாய்ராவிற்கும் உள்ள விவகாரத்து பற்றி தான் சமூக வலைத்தளங்களில் பரவலாக பி[இசைப்பாட்டு வருகிறது. 29 வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்த இவர்களின் விவகாரத்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்களுக்கு 2 பெண் மற்றும் 1ஆண் மகனும் உள்ளார். இவர்களின் மூத்த பெண்ணான கதீஜாக்கு திருமணம் ஆன நிலையில் இவர்கள் ஏன் விவகாரத்து பெறுகிறார்கள் என அனைவரும் பேசும் அளவிற்கு தான் இருந்தது. இந்நிலையில் இவரின் பின்னணி கிட்டாரிஸ்ட் மோகினி டேவும் விவாகரத்து செய்வதால் இவர்களை வைத்து சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் ரகுமானின் மகன் அமீன் இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்குமாறு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, என் அப்பா ஒரு legend. அவர் இசையமைப்பதில் மட்டும் அல்ல, பல வருடங்களாக சேர்ந்து வைத்த மரியாதை, மதிப்பு மற்றும் அன்பு ஆகியவற்றை கெடுக்காதீர்கள். அவரை பற்றி பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் புறப்படுவதை பார்க்கும்போது மனமுடைந்து போனேன். இப்படி பொய் தகவல்களை பரப்பாதீங்க” என ஆதங்கத்தில் ஏ.ஆர்.அமீன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

You may have missed