இராணுவ வீரர் மேஜர் முகுந்த் நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய நடிகை சாய்பல்லவி…

நடனத்தில் முதலிடம் பெற்று அதன் மூலம் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சாய்பல்லவி அவர்கள்.இவர்களின் திருப்புமுனையாக அமைந்த படம்தான் ப்ரேமம் இப்படத்தின் மூலம் இவர் மக்களிடையே மலர் டீச்சர்-ஆக இடம் பிடித்தார்.இன்றளவும் ஹேட்டர்ஸ் இல்லாத ஒரு நடிகையாக வலம் வருகிறார் இவர்.

தற்போது இவர்,SK அவர்களுடன் அமரன் என்ற படத்தில் நடித்து படம் தீபாவளி அன்று வெளி வர உள்ளது.இது ஒரு நிஜ கதை மற்றும் இராணுவ வீரரின் தியாகத்தை குறிக்கும் கதை என்பதால் மக்களிடையே மிகுந்த எதிர் பார்ப்புடம் இருக்கிறது இப்படத்தின் வெளியேற்றம்.

இந்நிலையில் சாய்பல்லவி அவர்கள் மேஜர் முகுந்த் அவர்களின் நினைவிடம் சென்று மரியாதையை செலுத்தி உள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.