புஷ்பா2 பாடல் வெளியீட்டு விழாவில் நாம் எந்த மண்ணில் இருக்கிறோமோ அந்த மொழிதான் பேசவேண்டுமென கூறி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அல்லு அர்ஜுன்…

புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதே நபர்களை வைத்து தற்போது இயக்கி வரப்படும் படம் தான் புஷ்பா 2.இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது வேகமாக நடந்து வருகிறது.முதல் படத்தின் அமோக வசூலினால் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக அதிக பட்ஜெட்டில் ரெடி ஆகி வருகிறது.இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி வெளிவருமென அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடையில்தான் இதன் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து இதன் அடுத்த பாடல் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது. இதில் கலந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பு நிறுவனத்தின் மீது குற்றச்சாற்றை வைத்து சர்ச்சைகளை கிளப்பியது.ஆனால் அதே மேடையில் பேசிய அல்லு அர்ஜுன் மக்களை அழகாக ஈர்க்கும் விதமாக பேசியுள்ளார்.

மேடையில் ஏறிய அல்லு அர்ஜுன் அனைவருக்கும் வணக்கம் என ஆரம்பித்து நாம் எந்த மண்ணில் இருக்கிறோமோ அந்த மொழியில் தான் பேச வேண்டுமென கூறி நான் தமிழ்நாட்டிற்கு வந்தால் வணக்கம் எனவும், அரபு நாடுகளுக்கு வந்தால் அரபியில் வணக்கம் எனவும், இந்திக்கு சென்றால் ‘நமஸ்தே’ எனவும், தெலுங்குக்கு வந்தால் ‘பங்காரம்’எனவும், தான் கூறுவேன் என சொல்லி ரசிகர்களை கவரும் விதத்தில் பேசியுள்ளார்.
