அமரன் பட வெற்றியை தொடர்ந்து மதுரை கோவிலில் அழகர் சுவாமியை மனைவியுடன் தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்…

விஜய் தொலைக்காட்சியில் ஒரு போட்டியாளராக வாழ்க்கையை தொடங்கியவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த டீவியில் அத்தனை நகைச்சுவை செய்து தன்னை தானே கோமாளி போன்றெல்லாம் காண்பித்து படிப்படியாக முன்னேறியவர் தான் இவர். மெரினா படத்தின் மூலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் இவர். அதனைத்தொடர்ந்து தன் கடின உழைப்பால் முன்னேறி வந்துள்ளார்.

இன்று இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்களை வரை ரசிகர்களாக வைத்துள்ளார் இவர். நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மிமிக்ரி செய்வதில் சிறந்தவர் என பல திறமைகளை கையில் வைத்துள்ளார். இவரின் சில படங்கள் தோல்வி கொடுத்த நிலையிலும் அவரின் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து உச்சம் தோட்ட ஒரு நடிகர். இவரின் நடிப்பில் வெளிவந்த டான் படம் மற்றும் டாக்டர் படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தீபாவளி அன்று இவரின் நடிப்பில் வெளிவந்த அமரன் படம் அமோக வெற்றி அடைந்தது. இப்படம் கிட்டத்தட்ட 300 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்து வந்தது. இப்படம் இவரின் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக உள்ளது எனலாம். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தன் மனைவி ஆர்த்தியுடன் மதுரை அழகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
pic1

pic2

pic3
