ஒல்லி லுக்கில் நடிகர் அஜித்.. ஷூட்டிங்கிற்காக உடல் எடை குறைத்த லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது..!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தான் அல்டிமிஸ்டார் அஜித் குமார் .இவர் தற்போது நடித்து வரும் படம் விடாமுயற்சி.இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியது. மேலும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைதிரி மூவீ மைக்கேர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளிவரும் என தயாரிப்பாளர்கள் கூறிவரும் நிலையில் எந்த படம் வெளிவரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இந்த இரண்டு படங்களையுமே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். குட் பேட் அக்லி படத்தில் அஜித் நெகடிவ் கதாபாத்திரம் என தெரிய வந்தது. இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். நடிகர் பிரசன்னாவும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அஜித்தின் புதிய லுக் போட்டோஸ் ஓன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஷூட்டிங்கிற்காக நடிகர் அஜித் உடல் எடை குறைத்துள்ளார். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லி லுக்கில் மாறிய நடிகர் அஜித். அந்த ஒல்லி லுக் போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அஜித்தா இது என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.