80ஸ், 90ஸ் களில் கலக்கிய இந்த நடிகரை நியாபகம் இருக்குதா..? இணையத்தில் உலாவும் குடும்ப புகைப்படம்..!


நடிகர் அஜய் ரத்தினம் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். 1989-ம் ஆண்டு முதல் படமான நாளைய மனிதன் திகிலான கதையம்மசம் கொண்ட படத்தில் நடித்து மிரட்டியிருப்பார். இன்றும் இந்த படத்தை கணபவர் பயத்தில் உறைவார்கள். அதன் பிறகு அதிசயமனிதன், குணா, தர்மதுரை, காவல்நிலையம், சிங்காரவேலன், தேவர்மகன், பாண்டித்துரை, வேடன், திருடா திருடா, ஜென்டில்மேன், வீரா, காதலன், இந்தியன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், போக்கிரி, சிங்கம், துப்பறிவாளன், தமிழ்ப்படம்-2 போன்ற படங்களில் வில்லன், காவல் துறை அதிகாரி, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஐந்து மொழிகளில் 400 படங்களுக்கு மேலாக நடித்து வருகிறார்.

சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார் அதில் மர்மதேசம், சித்தி, அண்ணாமலை, பொறந்த வீடா புகுந்த வீடா, திருமாங்கல்யம், பூவே உனக்காக போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
இளையஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மேடை பேச்சாளராக இருந்து வருகிறார்.இளைஞர்கள் ஒழுக்கம் மற்றும் உயர்ந்த குணங்களோடு திறமையுடன் வாழ்வில் போராடி ஜெயிக்க வேண்டும் என்றும், தன் வாழ்வில் அனுபவங்களை பகிர்ந்து ஊக்கமளிக்கும் பேச்சாளராக பணி செய்து வருகிறார்.
நடிகர் அஜய் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகன் தீரஜ் விஷ்ணு ரத்தினம் நடிகராக இருக்கிறார். இவரது முதல் படம் ஆறாவது சினம், அதன் பின்னர் சதுரங்க வேட்டை-2, துப்பறிவாளன் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பளுதூக்கும் வீரர் ஆவார். சென்னையில் நடந்த பவர் லிப்டிங்க் போட்டியில் 200 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெறுள்ளார். பொறியாளர் படிப்பை படித்து விட்டு காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்ற கனவில் இருந்தவர் தற்செயலாக சினிமா துறையில் வந்ததாக கூறியுள்ளார். உலக நாயகன் கலஹாசன் அவர்கள் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் படி அறிவுரை கூறியதாக தெரிவித்துள்ளார். இவர்க்கு பிடித்த வில்லன் நடிகர்கள் ரகுவரன் மற்றும் பிரகாஷ் ராஜ் அவர்கள் என்று கூறியிருக்கிறார். அவர் தன் தந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது….
pic1

pic2
