இளையதளபதி படத்திற்கு ரிஜெக்ட் சொன்ன ஐஸ்வர்யா ராய்.. காரணம் தெரியுமா..?!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் இளையதளபதி விஜய். இவர் பல வெற்றி படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். மேலும் 1994 ம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்றவர் உலக அளவில் பேமஸ் ஆன பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகி பட்டம் வென்ற பொழுது சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது சினிமா உலகம். இவர் இந்திய சினிமாவில் மட்டும் இல்ல உலக அளவில் உள்ள சினிமாவிலும் இவருடைய மவுசு பெரும் அளவில் தான் உள்ளது.


இவர் மணிரத்தினம் இயக்கிய இருவர் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த்க்கு ஜோடியாக ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். மேலும் இவர் ஜீன்ஸ் படத்தினை தொடர்ந்து பிரபல நடிகர்களான மம்புட்டி மற்றும் அஜித் இருவரும் இணைந்து நடித்த கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் மம்புட்டிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.


அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான இளைய தளபதி விஜயுடன் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். ஆனால் அது நடக்காமல் தோல்வியில் முடிந்தது. விஜய் நடித்த தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு முதலில் ஐஸ்வர்யா ராய்யிடம் தான் பேச்சுவார்தை நடத்தினார்கள். ஆனால் விஜய் உடன் ஜோடியா நடிக்க ஐஸ்வர்யா மறுத்துவிட்டார்.


விஜய் என்னை விட வயதில் சிறியவர் அவருடன் நான் நடிக்கமாட்டேன் அவருடன் நான் ஜோடியாக நடித்தால் எங்களுடைய ஜோடி பொருத்தம் நல்லா இருக்காது என்று சொல்லி விஜயுடன் நடிக்க மறுத்துவிட்டாராம் ஐஸ்வர்யா ராய். அதன் பின்னர் தான் படக்குழுவினர் 2000ம் ஆண்டில் உலக அழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ராவை தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைத்தார்களாம். பிரியங்கா சோப்ராக்கு இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed