BB வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா… மனம்திறந்து வெளியிட்ட முதல் பதிவு…

கடந்த 7 வருடங்களாக உலகநாயகன் கமல்காசனால் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் இந்த வருடம் விஜய் சேதுபதி அவர்களால் அவரின் தனி ஸ்டைலில் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் இதில் இருந்து சில போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகி வெளியேவும் வந்துள்ளனர்.

இதில் முதல் வாரம் ரவீந்தர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது அடுத்தடுத்தாக நபர்கள் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில் நிகழ்ச்சி தற்போது காரசாரமாக நடந்து கொண்டிருக்கிறது.இதில் ஒரு போட்டியாளராக உள்ளே வந்தவர் தான் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சுனிதா.இவர் தான் யாரும் எதிர்பாரதா அளவில் தற்போது நான்காவது ஆளாக வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இதனால் சுனிதாவின் ரசிகர்கள் மிக அதிர்ந்து போய் விட்டனர் எனலாம். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சுனிதா அவர்கள் முதல் முறையாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் 35நாட்கள் என்பது எண்ணற்ற நினைவுகளை கொண்டுள்ளது, அதற்கு நன்றிக்கடனாக இருப்பேன் என மனம் திறந்து கூறியுள்ளார்.

You may have missed