இளசுகளின் கவனத்தை ஈர்த்த அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கரின் 2.3 வியூஸ் போன ஒன்ஸ் மோர் மூவி க்ளிப்ஸ்…

மணிகண்டனை வைத்து குட்நைட் மற்றும் லவ்வர் படங்களை தயாரித்து நமக்கு கொடுத்ததுதான் மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ.இந்த இரு படங்களுமே மகா வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் ஓரளவு வெற்றியை கொடுத்தது எனலாம்.

இதை தொடர்ந்து அதே தயாரிப்பு நிறுவனம் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் வைத்து ஒரு படம் எடுக்கிறது.இப்படத்தின் ஷூட்டிங் தற்பொழுது முடிந்துள்ளது.இதன் இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் ஆவார்.இவரின் முதல் படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்திற்கு விஜய் பட டைட்டில் ஆன ஒன்ஸ்மோர் என்று வைத்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகி இளைஞர்களின் கவனத்தை முழுவதுமாக இழுத்துள்ளது.இப்படம் காதல் ஆசை இல்லாத நாயகனுக்கும் துரத்தி துரத்தி காதலிக்கும் நாயகிக்கும் இடையில் உள்ள கதைக்களமாக மிக சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.