நான் எந்த விசியத்திற்கும் புள்ளி வைக்க மாட்டேன்.. கல்யாணம் குறித்து விமர்சையாக பேசிய நடிகை வனிதா..!
தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர் நடிகை வனிதா விஜயகுமார் . இவர் பிக் பாஸ், சோசியல் மீடியா பிரபலம், சமையல் கலைஞ்சர் என பல திறமைகளுடன் இன்றளவும் பிரபலமாக உள்ளவர். இவர் எப்போது பேட்டியளித்தாலும் இவருடைய பதில்கள் எல்லாம் மிகவும் சுவாரசியமானதாக தான் இருக்கும். மிகவும் துணிச்சலாக தைரியமாக தான் பதில் கூறுவர்.இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஓன்று தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஒரு பேட்டியில் கல்யாண சாப்பாடு எப்போது போடுவிங்கள் என்று கேட்ட கேள்வி ஓன்று வைரல் ஆகி வருகிறது. அதற்கு பதில் கூறிய வனிதா. இந்த கேள்வியை எல்லாரிடமும் கேட்டிட முடியாது. சினிமாவில் இந்த கேள்வியை ஒரு சில பேர்கிட்ட மட்டும் தான் கேட்க முடியும் என்று சொல்லியுள்ளார்.
அந்த கேள்வியை அவரிடம் கேட்ட்து தொகுப்பாளினி பிரியங்கா. அதற்க்கு பதில் கூறிய அவர் நான் எதற்கும் புள்ளி வைக்க மாட்டேன் எனவும் மேலும் கோமாவில் தான் என்னுடைய வாழ்கை ஓடி கொண்டிருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் நான் மீண்டும் கல்யாணமே பண்ண மாட்டேன் என்று எல்லாம் சொல்லமாட்டேன். நான் எந்த வயதில் இருந்தாலும் நான் என்ன சொல்லவேன் என்று மக்கள் மிகவும் எதிர்பார்ப்போடு இருப்பார்கள் அதை நான் என்னுடைய ஆசீர்வாதமாக எடுத்துக்கொள்வேன் எனவும் கூறியுள்ளார். மேலும்
அவருடைய மகன் குறித்தும் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். மகனின் வளர்ச்சியை அவன் தான் போராடி வர வேண்டும் எனவும் அவன் எவ்வளவு பெரிய பையனாக இருந்தாலும் எனக்கு அவன் குழந்தை தான் என்று கூறியுள்ளார். மேலும் மகள் ஜோவிகா பற்றியும் பேசியுள்ளார். நான் அவள் நடிக்க வேண்டும் என்று ஆசை படவில்லை. நானே சினிமாவில் இருந்து விலகி வந்தவள் அவளை நான் ஏன் சொல்லப்போகிறேன். அவளுடைய விருப்பம் அது. அதற்கு நான் துணை நிற்பேன் என்று பேசியுள்ளார். இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.