எவர்கிரீன் 90-ஸ் ஹீரோயின் சிம்ரனின் கணவரா இது…? ஹீரோ போல் இருக்காரே… வெளியான குடும்ப புகைப்படம்..!


90-ஸ் மற்றும் 2கே-காலத்தின் துவக்கத்தில் இவரின் படங்கள் மற்றும் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பிருக்கும். எந்த கதாநாயகனுடன் ஜோடியாக நடித்தாலும் அவருக்கு பொருத்தமான ஜோடியாக திரையில் பொருந்துவார். அதிலும் இவர் இளையதளபதி விஜய், அஜித் குமார், பிரசாந்த், பிரபுதேவா,அப்பாஸ், மாதவன் ஆகியோருடன் நடித்த படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக இருக்கின்றன. இவர் நடிக்கும் படங்களில் அவரது பாடல்கள் தனி துவத்தோடு சிறந்து விளங்க இவரது நடனம் ஒரு முக்கிய காரணமாகும்.

சிம்ரனுக்கு இணையாக ஈடு கொடுத்து ஆடும் கதாநாயகர் இளையதளபதி விஜய் மட்டுமே. இந்த ஜோடி மக்களால் விரும்பப்பட்ட ஜோடியாக இருந்தது. விஜய் மற்றும் சிம்ரன் ஐந்து படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
சிம்ரன் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பு பாலியுட்டில் அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பிறகு தென்னிந்தியாவில் மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுடன் இந்திரா பிரஸ்தம் படத்தில் அறிமுகம் ஆனார். தமிழில் ஒன்ஸ் மோர் படத்தில் 1997-ம் ஆண்டு விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி அவர்கள் நடிப்பில் வெளிவந்தது. முதன் முதலாக அவர் ஜோடியாக நடித்தது நடிகர் சூர்யாவோடு நேருக்கு நேர் ,அந்த படம் வெளியிட காலதாமதம் ஆனதால் ஒன்ஸ்மோர் மற்றும் பிரபு தேவா அவர்களுடன் நடித்த விஐபி படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்ற படமாக இருந்தது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய படங்களில் அனைவராலும் ரசிக்கப்பட்ட …….ரசிகர்களால் விரும்பப்பட்ட ……நடிகைகளில் முதல் இடத்தில் இருந்தார். அவரது தங்கை மோனலும் நடிகை ஆவார். பின்னர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். உச்ச நட்சத்திரமாக நடித்து கொண்டிருக்கும் போதே பள்ளி தோழரான தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்பு குறிப்பிட்ட
படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். 2009-ல் வாரணம் ஆயிரம், நடிகர் சூர்யாவின் மனைவியாகவும், தயாராகவும் நடித்து திரையுலகில் பிரபலங்கள் பலரின் பாராட்டை பெற்றுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமலஹாசன் போன்ற மூத்த முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிமரன் தனது கணவர் தீபக் பாக்கவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது……அந்த புகைப்படத்தை இங்கே காணலாம்…
pic1

pic2
