நடிகை சமந்தா கையில் அணிந்திருக்கும் பாம்பு வடிவிலான வாட்ச்… எவ்வளவு லட்சம் தெரியும்..?

0

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியை வலம் வந்தவர் பிரபல நடிகை சமந்தா. அவருக்கு சமீப காலத்தில் ஏற்பட்ட உடல் நலம் குறைவு காரணமாக அவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். மேலும் அவர் யோகா தியானம் போன்ற உடற்பயிற்சிகள் செய்கின்ற விடீயோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அவருடைய உடல் நலம் சரியான பின்னர் மீண்டும் திரையுலகிற்கு வர ஆரம்பித்தார்.


இவர் தற்பொழுது “citadel : Honey Bunny” என்ற சீரிஸில் நடித்துவருகிறார். அதனுடைய பிரிமியர் சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இதில் பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். மேலும் பலர் கலந்து கொண்டனர். சமந்தாவும் கலந்து கொண்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியிட்டுள்ள போட்டோஸ்கள் படு மாஸ்ஸாக ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


இந்நிலையில் சமந்தாவின் ஸ்டில்களில் சமந்தா பாம்பு வடிவில் ஒரு வாட்ச் அணிந்திருந்தார். அந்த வாட்சின் விலை குறித்து சமந்தா வெளியிட்டிருந்தார். பாம்பு வடிவத்தில் இருக்கும் அந்த வாட்சின் விலை சுமார் ரூபாய் 47.57 லட்சம். வாட்சின் விலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *