தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரதியா இது..? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க…

தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை ஹீரோக்கள் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கின்றனர். ரஜினி, கமல் எல்லாம் 40 வருடங்கள் கடந்தும் இன்னும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். ஹீரோயின்கள் அப்படி இல்லை. திருமணத்தோடு அவர்களின் மார்க்கெட்டும் விழுந்துவிடுகிறது.

90களில் தமிழ்சினிமாவில் கலக்கிய நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரதி. பத்து வயதிலேயே மாடலிங் துறைக்கு வந்துவிட்ட இவர், பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் மூலம் அறிமுகமானார். ரஜினி, கமல், விஜயகாந்த் என அன்றைய நாளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த இவர், தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த அன்புக்கு நான் அடிமை, தம்பிக்கு எந்த ஊரு படங்க:ள் மெகா ஹிட் அடித்தன. ஒருகாலத்தில் சினிமாவில் கோலோச்சியவர், இப்போது நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். அவரது ஒரே மகனும் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார். அவரது குடும்பப் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே ரதியா இது? அடையாளமே தெரியவில்லையே எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்.
pic1

pic2
